பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதிர்ச்சியான மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர்.

இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
24 மணி நேரத்திற்குள், இன்று பாகிஸ்தானில் மூன்று முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. முதலாவதாக, இந்திய நேரப்படி, அதிகாலை 3.54 மணிக்கும், இரண்டாவது காலை 8.02 மணிக்கும் 3 வதாக 11.21 மணிக்கும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.5, 4.5, மற்றும் 3.8 என்று ரிக்டரில் பதிவாகியது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் முல்தானுக்கு மேற்கே சுமார் 149 கிலோமீட்டர் (92.5 மைல்) தொலைவில் அமைந்தது. 5.5 ஆக ரிக்டர் அளவில் பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்தனர்.

2வது நிலநடுக்கம் 4.5 ஆக பதிவானது. மூன்றாவது நிலநடுக்கம் 15 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது, இதனால் அது பின்அதிர்வுகளுக்கு ஆளாகக்கூடும். நிலநடுக்கத்தில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், மற்ற மூன்று வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

இவ்வாறு நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here