SST குறித்து தவறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம் என்கிறார் பிரதமர்

YAB Perdana Menteri, Dato' Seri Anwar Ibrahim, mempengerusikan mesyuarat majlis pembangunan Wilayah Ekonomi Pantai Timur di Putrajaya. 30 Jun 2025. FATH RIZAL/Pejabat Perdana Menteri.NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This handout videos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the visual or facts mentioned in the caption. Reuse of the videos may require further permission. MANDATORY CRED

கோலாலம்பூர்:

நாட்டில் SST எனப்படும் விற்பனை சேவை வரி நாளை முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதனால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகத் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SST வரி விரிவாக்கம் என்பது பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கும் சிலர் அடிப்படை சிக்கல் அறியாதவர்கள் என அன்வார் தெரிவித்தார். SST வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் இது விற்பனையில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களுக்கானது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது தொடர்பான விமர்சனங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் உண்மைகளின் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

SST வரி விரிவாக்கத்தால் மின் கட்டணம் வணிகத் தலங்களுக்கு உயர்த்தப்படிருப்பதாகவும் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் பிரதமர் விளக்கமளித்தார். வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் வணிகத் தளங்களுக்கும் அதே கட்டணத்தில் வழங்கப்படுவதில் நியாயமில்லை.

மேலும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறதா என்பது தான் என்னுடை கேள்வி. அப்படியே அது உண்மையாக இருந்தால், நாம் அதை சரிசெய்ய வேண்டும். எனக்குத் தெரிந்தவரை பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவதூறுக்கான சுதந்திரம் இப்போது அவமானப்படுத்தும் இடமாகவும் மாறிவிட்டதால் இதுபோன்ற விஷயங்கள் பரப்பப்படுகின்றன. எனவே அனைவரும் தயவு செய்து உண்மை தகவல்களை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். மக்கள் கண்டிப்பதிலும் விமர்சிப்பதிலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here