உணவகங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக அழிவு

கோலாலம்பூர்,

Jalan Cochrane, KL அருகே உள்ள Jalan Nakhoda Yusof பகுதியில் அமைந்துள்ள விருந்து உணவக தொகுதியில் (Virunthu Food Court) இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் முழுமையாக தீக்கிரையானது, மேலும் நான்கு கடைகள் பகுதியளவில் சேதமடைந்தன.

காலை 8.18 மணி அளவில் MERS999 ஹாட்லைன் வழியாக அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 16 பேர் கொண்ட தீயணைப்புப் படையினரும், இரண்டு தீயணைப்பு வண்டிகளும், இரண்டு விரைவு மோட்டார்சைக்கிள்களும் அனுப்பப்பட்டன என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

“மொத்தம் ஏழு கடைகள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டன. இதில் மூன்று கடைகள் முழுமையாக அழிந்தன; மற்ற நான்கு கடைகள் சுமார் 20% சேதமடைந்தன. ஒவ்வொரு கடையும் சுமார் 5 x 7 சதுர அடி பரப்பளவில் இருந்தன. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.” எனவும் தீ விபத்தின் காரணம் மற்றும் சாத்தியமான இழப்பு மதிப்பீடு தொடர்பான விசாரணை தொடர்கிறது எனவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here