கோலாலம்பூர்,
ஜோகூர், சிலாங்கூர் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆறு உலோக தொழிற்சாலைகளில் நடைபெற்ற ‘Op Padu 2.0’ நடவடிக்கையின் போது, சுமார் RM96.3 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உலோக பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை (KDNKA) இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் கூறினார்.
இந்த தொழிற்சாலைகள் கட்டடத் துறைக்கும் உள்ளூர் தொழில் துறைக்கும் உலோக பொருட்களை இறக்குமதி செய்து, செயல்படுத்தி வழங்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.
11,000 rebars, 152,830 Hollow Section Steel Bars, 4,393 Flat Bars, 2,432 Hot-Dipped Galvanised Steel Coils,உலோக வெட்டும் இயந்திரங்கள்,3 ஃபோர்க்லிஃப்ட், 152 எரிவாயு சிலிண்டர்கள் ஆகிய மொத்தமாக RM96,350,231 மதிப்புமிக்க பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரப்பூர்வமான முறையான PPS சான்றிதழ் இல்லாமல் இந்த உலோகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டடத் துறையில் பயன்படும் தயாரிப்பு நிலை இரும்புப் பொருட்கள் CIDB (Construction Industry Development Board) சான்றிதழின்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த தொழிற்சாலைகளில் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்களும் வேலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயது: 26 முதல் 59 வரை உள்ள 3 உள்ளூர் ஆண்கள், 57 வெளிநாட்டு குடிமக்கள், அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, RM12,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மலேசிய இராணுவம் (PDRM), மலேசிய குடிநுழைவு துறை, மலேசிய சுங்கத் துறை, சுற்றுச்சூழல் துறை,CIDB, SIRIM, உள்ளூர் அதிகாரிகள் (PBT) ஆகியோர் பங்கேற்றனர்.