மலேசிய மக்கள் தொகை 2059 ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்

கோலாலம்பூர்:

மலேசிய மக்கள்தொகை வரும் ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டின் மக்கள் தொகை 32.45 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2060ஆம் ஆண்டு 42.37ஆக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, புள்ளிவிவரத்துறை வெளியிட்டுள்ளது.

புள்ளிவிவரத் துறையின் தரவுகளின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் மக்கள்தொகை 36.49 மில்லியனாக உயரலாம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் 2040ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 39.78 மில்லியனாக மாறக்கூடும். 2050ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 41.79 மில்லியனாகக் கூடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2030க்கும் 2060க்கும் இடையில் மலேசிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அதன் பின்னர் அது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here