அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் பதவியேற்ற நாள்முதல் உள்நாட்டிலும், உலக நாடுகளின்மீதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இது அவர்மேல் உலகளவில் கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால் அமெரிக்காவின், தனியார் கம்பெனிகளில் ஏற்கெனவே பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில், அரச ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவது வேதனைக்குரியது என்ன அங்குள்ள மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.





















