ஜார்ஜ் டவுனில் உலோகக் கம்பியைக் கொண்டு காரை சேதப்படுத்திய ஆடவரை தேடும் போலீசார்

பினாங்கு ஜார்ஜ் டவுன், ஜாலான் லெபு பந்தாய் பகுதியில் நேற்று நடந்த சாலை மோதல் சம்பவம் தொடர்பில்  போலீசார் ஒருவரை தேடி வருகின்றனர். அந்த நபர் தனது காரில் இருந்து இறங்கி மற்றொரு காரை உலோக கம்பியைக் கொண்டு சேதப்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

தீமூர் லாவூட் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் லீ ஸ்வீ சேக் நேற்று மாலை 7.55 மணிக்கு புகார் அளித்ததாக தெரிவித்தார். மாலை 4 மணியளவில் புகார்தாரரின் வாகனத்தை சந்தேக நபர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர் தனது காரில் இருந்து வெளியே வந்து, அதிலிருந்து ஒரு உலோக கம்பியை எடுத்து புகார்தாரரின் காரின் பின்புற கதவை மோதியதில் 3,000  ரிங்கிட் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் லீ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here