மருந்து கலந்த vape விற்பனைக்கு எதிராக சுகாதார அமைச்சும் போலீசும் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை

கூலாய்,

மருந்து கலந்த vape தயாரிப்புகள் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரமாக்க சுகாதார அமைச்சும் (MOH) போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுகாதாரத் துணை அமைச்சர் Datuk Lukanisman Awang Saun தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை கடந்த ஆண்டு தொடக்கம் மருந்து கலந்த vape திரவங்களைச் சேர்ந்த 96 விசாரணை சம்பவ ங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 70 விழுக்காட்டிற்கு மேல் செயற்கை கஞ்சா மற்றும் amphetamines போதைப்பொருட்கள் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வைத் தொடக்கி வைத்து அவர் பேசுகையில் “போதைப்பொருள் கலந்த vape மாதிரிகளை சோதிக்க ஆய்வகங்களின் கண்காணிப்பையும் அதிகரித்து வருகிறோம். அதேசமயம் போலீசாருடன் நெருங்கிய ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்படுகின்றது,” என்றார் அவர்.

மருந்து கலந்த vape தயாரிப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யார் என்பதை உறுதி செய்ய விசாரணை நடைபெற்று வருவதாகவும் துணை அமைச்சர் கூறினார்.

இந்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்க, தற்போது இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்துவதுடன், இது போலீசாரின் அதிகாரத்திலும் உள்ளது என்றார்.

கடந்த மே மாதம், இந்தச் சூழ்நிலையை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சின் துணை பொதுநிலை இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி தலைமையில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புதிய சட்டமான Control of Smoking Products for Public Health Act 2024 (Act 852) உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் பணியும் நடந்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here