புத்ராஜாயா,
மூன்று மாத குழந்தை ஒன்று பாலியல் வன்முறைக்கு ஆளானதோடு, அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து விற்றனர் என்று மலேசிய உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail இன்று அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை வெளியிட்டுள்ளார்.
“இது ஒரு வெறும் சம்பவம் அல்ல. இப்படி ஒரு விஷயம் பற்றி நள்ளிரவில் 12.30 மணிக்கு என்னிடம் தகவல் வழங்கப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியளித்தது ” என அவர் இன்று நடந்த அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் தெரிவித்து ள்ளார்.
“மூன்று மாத குழந்தை! . …இது மானுடத்திற்கே ஒரு அவமானமான செயலாகும்,” என அவர் கண்டித்தார்.
பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், இது போன்ற விஷயங்களை முழுமையாக வெளியிடுவது பொது மக்கள் மத்தியில் பயம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மேலதிக விவரங்களை நான் பகிர விரும்பவில்லை என்றார் அவர்.





















