RM48,960.20 சொத்து மோசடி வழக்கில் முன்னாள் நிறுவன இயக்குநருக்கு இரண்டு குற்றச்சாட்டுகள்

கிள்ளான் ,

உம்ரா பயண சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றின் முன்னாள் இயக்குநர் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற மொத்தம் RM48,960.20 பெறுமதிமிக்க சொத்து மோசடி வழக்கில், இன்று கிள்ளான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

44 வயதான டத்தோ Zulkarnain Endut, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் முறையிட்டார். மஜிஸ்திரேட் சித்தி சுபைடா மஹாத் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், ஜூலை 2023 காலப்பகுதியில் கிள்ளானில் உள்ள ஒரு 45 வயது ஆடவரிடம் மொத்தம் RM27,960.20 பண மோசடிஇளம் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மற்றொரு வழக்கில், மஜிஸ்திரேட் Nor Azilah Mat முன்னிலையில் இன்னும் பிடிபடாத ஒருவருடன் இணைந்து, Emraz Travel and Tours Sdn Bhd. வழி உம்ரா பேக்கேஜ் வழங்குதாக்க கூறி இன்னொரு ஆடவரிடமிருந்து பெற்ற RM21,000 பணத்தை மோசடியாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த இரு வழக்குகளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 403-ன் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படும். நீதிமன்றங்கள் தலா RM2,500 மற்றும் RM6,000 வரை பிணை வழங்கியுள்ளன. வழக்கின் ஒப்பந்த நாளாக செப்டம்பர் 24 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here