புதிதாக பிறந்த குழந்தையை கைவிட்ட பெண் கைது

லஹாத் டத்துவில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே தனக்கு பிறந்த குழந்தையை கைவிட்டுச் சென்றதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.  லஹாத் டத்து காவல்துறைத் தலைவர் துல்பஹரின் இஸ்மாயில், 30 வயதான சந்தேக நபர் லஹாத் டத்து காவல் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

விசாரணையின் போது, அவர் குழந்தையைப் பெற்றெடுத்து கம்போங் புருங்கில் உள்ள வீட்டிற்கு வெளியே வைத்ததாக ஒப்புக்கொண்டார். குழந்தையை கைவிடும் நோக்கத்துடன் பிறப்பை மறைத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இது குற்றம் என நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.06 மணிக்கு எண் இல்லாத வீட்டின் முன் துணியில் சுற்றப்பட்ட குழந்தையை பொதுமக்களில் ஒருவர் கண்டார். அந்த நேரத்தில் உயிருடன் இருந்த குழந்தை, சிகிச்சைக்காக லஹாத் டத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதே நாள் மாலை 7.02 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏனெனில் குழந்தை  பிரசவ காலத்திற்கு முன்பே பிறந்ததால் எடை குறைவாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here