புத்ராஜெயா:
தனது தலைமையைக் குற்றம் கூறி நடக்கின்ற எந்தவொரு கூட்டத்தையும் அல்லது அறிக்கைகளையும் தாம் தடை செய்யவில்லை என்றும் அரசாங்க மாற்றம் நடைபெற வேண்டுமானால் அது ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டு, பொதுத் தேர்தல் அல்லது பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் இன்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தைரியம் இருந்தால் எதிர்க்கட்சிகளை நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைக்க சவால் விடுத்தார். அவர்களுக்கு அதிக செல்வாக்கும், ஆதரவும் இருந்தால், அதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு அழைத்துக்கொண்டார்.
“சிலர் நான் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறுகிறார்கள். அதுகுறித்து போலீசார் எனக்கு அறிக்கை அளித்தனர், ஆனால் மாற்ற விரும்பும் சிலரோ தேர்தலை விரும்பவில்லை, என்றும் கூறினார்.
குறுக்கு வழியில் அல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கடசியினருக்கும், என்னை பதவி விளக்க சொல்ல முயற்சிப்பவர்களுக்கும் அதிகமான ஆதரவு இருந்தால், அரசு கண்டிப்பாக பதவியிலிருந்து விலகும். இது நமது அரசியல் அமைப்பின் விதி,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.





















