அன்வாருக்கு எதிராக களத்தில் இறங்கும் துன் மகாதீர். பேரணியில் கலந்து கொள்ள முயற்சி

கோலாலம்பூர்,

“அன்வார் பதவி விலக வேண்டும்” என்ற கோஷத்துடன் நாளை (ஜூலை 26) கோலாலம்பூரில் நடைபெற உள்ள பெரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் துன் மகாதீர்.

இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள அவரது ஒரு காணொளியில் “நாட்டை நேசிக்கும் பல இன மலேசியர்கள் நாளை கோலாலம்பூரில் நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நடைபெற்ற போராட்ட களத்தில் அவர் கலந்துகொள்வது ஆச்ச்சர்யமாகவுள்ளது என பலரும் கருத்து பதிவிட்டனர்.

“1998இல் அன்வாருக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளே இன்று மீண்டும் எழுகின்றன, நாட்டை நேசிக்கும் மலேசியர்கள் அனைவரும் இந்த அமைதியான ஜனநாயக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மையால் நாடு பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய துன் மகாதீர், அனைத்து மலேசியர்களும் இந்த ‘துருன் அன்வார்’ பேரணியை ஆதரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here