சமூக ஊடகங்களில் போலித் தகவல்களின் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை – AI உள்ளடக்கத்துக்கு கட்டாய லேபிள்.

கோலாலம்பூர்,

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களின் பரவலைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு ‘AI உருவாக்கியது’ அல்லது ‘AI மேம்படுத்தியது’ போன்ற லேபிள்களை கட்டாயமாக வழங்க அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது என இன்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபட்ஸில் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்:

“இது தொடர்பாக Act 866, அல்லது ம்ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் (ONSA) மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மம்க் (MCMC) உத்தரவாதங்களை முடித்ததும், இந்த சட்டம் ஆண்டு முடிவுக்கு முன்னதாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

பிரதமரின் குரலையும் உருவத்தையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ‘deepfakes’ வீடியோக்கள் குறித்து டத்தோ முகமட் சுகைமி அப்துல்லா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பாஹ்மி, AI உருவாக்கும் தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துவது இன்று ஒரு தேசிய மற்றும் சர்வதேச சவாலாக உள்ளது எனக் கூறினார்.

“சமூக ஊடக நிறுவனங்கள் இந்தச் செயல்களை கட்டுப்படுத்த கடமைப்பட்டுள்ளன; ‘deepfakes’ வீடியோக்கள் பரவ அனுமதிக்கக் கூடாது,” என்றார் அவர்.

மேலும், Act 588 (தகவல் தொடர்பு சட்டம் 1998) அடிப்படையில் MCMC நடத்தும் விசாரணைகள் குறித்து அவர் பேசினார். முதற்கட்ட புகாரின் (FIR) அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

“சில சந்தேகத்துக்குரியவர்களுக்கு Act 588 இன் பிரிவு 255ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும். தேவையான தொடக்க ஆதாரம் இருந்தால், அந்த நபரின் தொடர்பு சாதனங்களை MCMC அல்லது போலீசாரால் பறிமுதல் செய்ய முடியும்,” என்று அவர் விளக்கினார்.

அனைத்து விசாரணைகளும் வெளிப்படையாகவும், நீதிமுறை நடைமுறைகளை பின்பற்றியும் நடைபெறும் என அமைச்சர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here