இனி முன்பதிவு இன்றி பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படமாட்டாது

கோலாலம்பூர், ஜனவரி 4 :

பூஸ்டர் தடுப்பூசிகளுக்காக கோவிட்-19 தடுப்பூசி மையங்களில் (பிபிவி) இனி முன்பதிவு இன்றி (walk in முறையில்) அனுமதிக்கப்படாது என்று ப்ரொடெக்ட் ஹெல்த் ProtectHealth நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ டாக்டர் அனஸ் ஆலாம் ஃபைஸ்லி கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள PPV களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது மற்றும் கூட்ட நெரிசல் பற்றிய செய்திகள் வெளியானதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

MySejahtera செயலியில் நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தகுதியுள்ளவர்கள் அல்லது அவசரமாக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த எண்ணுபவர்கள், மற்றும் MySejahtera முன்பதிவு நியமங்களை  பெறாதவர்கள், தங்கள் விருப்பப்படி அருகிலுள்ள தடுப்பூசி மையங்களில் சென்று, காத்திருப்போர் பட்டியலில் தொடர்ந்து பதிவு செய்யலாம் என்றும் ProtectHealth இன் https://www.protecthealth.com.my என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

இருமுறை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க, ஒரு தனியார் சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு தடுப்பூசி மையத்தில் மட்டும் பதிவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here