சூரியின் “மாமன்” ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு

சென்னை,தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த மே 16-ந் தேதி ‘மாமன்’ படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர். இப்படம் இதுவரைக்கும் ரூ. 48 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘மாமன்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ‘மாமன்’ படம் ஆகஸ்ட் 8 ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

தனது நுட்பமான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சூரி ” உண்மையான வெற்றி என்பது, உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாகப் பாராட்டுவதில் உள்ளது, மேலும் ‘மாமன்’ திரைப்படம் அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மையில் நடந்த சம்பவங்களின் உணர்ச்சிப்பூர்வமான பயணம், மேலும் இது எத்தனை பேரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு துடிப்பான படமாகத் திறமையாக உருவாக்கிய இயக்குநர் பிரசாந்திற்கு எனது மனமார்ந்த நன்றி. ‘மாமன்’ ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமாவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்தக் கதையைப் பார்த்து அனுபவிக்கவும், தங்கள் சொந்த பிணைப்புகளைப் போற்றவும் முடியும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here