கோலாலம்பூர்,
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பொதுப்பணி அமைச்சு, குறிப்பாக அடிக்கடி விபத்துகள் நடைபெறும் ஆபத்தான பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கவனம் செலுத்துவதாக துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
100 மீட்டர் பரப்பளவில் அல்லது 50 மீட்டர் சுற்றளவில், மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே வகையில் குறைந்தது மூன்று விபத்துகள் அல்லது வெவ்வேறு வகைகளில் ஐந்து விபத்துகள் பதிவாகும் இடம் “ஆபத்தான பகுதியாக” வகைப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
சேதமடைந்த சாலைகளால் ஏற்படும் தொடர்ச்சியான விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் உரையாற்றிய அவர், “சாலை விபத்துகளில் 80 விழுக்காடு பயனீட்டாளர்களின் கவனக்குறைவால் ஏற்படுகிறது.
இருப்பினும் சாலை நிலைமைகளால் ஏற்படும் 13 விழுக்காடு விபத்துகளுக்கு அமைச்சு நேரடி பொறுப்பை ஏற்கிறது,” என்றார்.



















