பினாங்கு:
பினாங்கு மாநிலம், நீர் கட்டண திருத்தத்தை ஒரு ஆண்டுக்குப் பிறகு, 2026 ஜூலை 1ம் தேதி நடைமுறையில் வருவதாக அறிவித்துள்ளது. முதல்வர் Chow Kon Yeow இதனைத் தெரிவித்தார்.
இந்த முடிவால் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நீர் பயனாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண மாற்றம் மாநில நீர் வழங்கல் நிறுவனம் (PBAPP)க்கு 2026ஆம் ஆண்டில் ஆறு மாதங்களில் சுமார் RM20 மில்லியன் வருவாயைக் கூட்டும் என கூறப்பட்டது. இது நீர் வசதிகளை மேம்படுத்த பயன்படும் எனவும் புதிய கட்டண உயர்வில், வீட்டுத் துறையில் (சராசரி cubic metres (m³) வரை நீர் பயன்படுத்தும் 79.88%) மாதச் செலவு RM0.30 முதல் RM2.55 வரை அதிகரிக்கும் எனவும் வணிகத் துறையில் (200cubic metres (m³) வரை பயன்படுத்தும் 95.38%) RM3.60 முதல் RM35.70 வரை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
மற்ற மாநிலங்களில் ஆகஸ்ட் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஆனால், பேராக் மாநிலத்தில் இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















