56 ASEAN இடங்களுக்கு முன்பதிவு! ஊடகவியலாளர்களுக்கான 50% தள்ளுபடி! என்ன செய்ய வேண்டும்?

புத்ரஜெயா,

மலேசிய தகவல் துறை (JPM ) அங்கீகாரம் பெற்ற உள்ளூர் ஊடகவியலாளர்கள், ஏர் ஆசியா விமான டிக்கெட்டுகளுக்கு 50% தள்ளுபடி பெற தனிப்பட்ட ஊக்குவிப்பு குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சலுகையை பெற, ஊடகவியலாளர்கள் முன்னதாக ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என JPM தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பிறகு: www.airasia.com தளத்திலும் அல்லது AirAsia செயலியில் 56 ASEAN இடங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

பணம் செலுத்தும் போது, பெற்ற ஊக்குவிப்பு குறியீட்டை ‘Promo Code’ பகுதியில் உள்ளிடுவதன் மூலம் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50% தள்ளுபடி பெறலாம்.

குறிப்பு: ஊக்குவிப்பு குறியீடு, விண்ணப்பிக்கிறதிலிருந்து மூன்று வேலை நாட்களுக்குள் அனுப்பப்படும்.

தகுதியானவர்கள் யார்?
2024 ஜூன் 4 அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்த ஊடக அங்கீகார அட்டை வைத்திருக்கும் மலேசியர்கள் மட்டுமே.

இந்த சலுகை முதல் 12,000 இருக்கைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பயண காலம்:
2026 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 6 வரை

பொது விடுமுறைகள் மற்றும் பள்ளி விடுமுறைகளைத் தவிர்த்து முன்பதிவு 2025 டிசம்பர் 31 வரை நடைபெறும்.

மேலும் தகவலுக்கு:
📞 03-8911 7381 / 03-8911 7382
🌐 emedia.penerangan.gov.my

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here