பன்றி இறைச்சி விலை உயர்வு: தாய்லாந்திலிருந்து இறக்குமதித் தடையை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை

கோலாலம்பூர்:

பன்றி இறைச்சி விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தாய்லாந்திலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதியை மீண்டும் அனுமதிக்கும் திட்டத்தை கால்நடை சேவைகள் துறை (DVS) பரிசீலித்து வருகிறது.

2019ஆம் ஆண்டு ASF (ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்) காரணமாக தடை செய்யப்பட்ட இந்த இறக்குமதி தற்போது மீள மதிப்பீடு செய்யப்படுகிறது என்றும், அது மலேசிய கால்நடை இறக்குமதி விதிமுறைகளை பூர்த்தி செய்தால் அனுமதி வழங்கப்படும் என்று, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோக் ஸ்ரீ முஹமட் சாபு கூறினார்.

தற்போது, 9 நாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், சரவாக்கிலிருந்து உயிர் பன்றிகள் சிலாங்கூருக்கு கொண்டு வரப்படுவதால் உள்ளூர் இரைச்சி விநியோகம் வலுப்பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரேசிலையும் புதிய இறக்குமதி நாடாக DVS மதிப்பீடு செய்து வருகிறது என்று அவர் சொன்னா.

இதேவேளை, ASF இன்னும் மலேசியாவில் பரவி வருவதாகவும், ஜூலை 9ல் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட கடைசி பரவலில் 2,799 பன்றிகளில் 578 பன்றிகள் அழிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தற்போது நோய் கட்டுப்பாட்டுக்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here