கோலாலம்பூர்,
Pantai Dalam பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகளும், பல வணிக நிலையங்களும் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக மந்திரி பாஹ்மி ஃபட்சில் அறிவித்துள்ளார்.
தீயில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக நிவாரணமாக பள்ளி ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
வணிகர்களும், குடும்பங்களும் எதிர்காலத்தில் எந்த வகையான உதவி தேவைப்படுமென ஆராய்ந்து, பிபிஆர் (PPR) வீடுகளுக்கு இடமாற்றம் செய்யும் வாய்ப்பு உள்பட பல திட்டங்கள் திட்டமிடப்பட உள்ளன எனவும் அவர் கூறினார்.
தீயால் பாதிக்கப்பட்ட Mydin Mart உள்ளிட்ட கடைகள் மற்றும் வீடுகள் முற்றிலும் நாசமாகியுள்ளதால், அவை இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படலாம் என தெரிவித்தார்.




















