கலை மற்றும் பண்பாடு சமூகத்தின் அனைத்து படிகளையும் இணைக்கும் – வான் அஸிசா

கோலாலம்பூர்,

கலை மற்றும் பண்பாடு சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் இணைக்கும் பாலமாக செயல்பட முடியும் என பண்டார் துன் ரசாக் மக்களவை உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிசா இன்று தெரிவித்தார்.

நாகரிகத்தின் உயிரோட்டமான கலை மற்றும் பண்பாடு, சமூகத்தின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல் , சமூகத்தின் மதிப்பு, அடையாளம் மற்றும் தேசிய ஒன்றுமையின் தூண்களாகவும் இருக்கிறது என அவர் கூறினார்.

இன்று பண்டார் துன் ரசாக் சமூகத்துடன் இணைந்து ‘கலை மற்றும் பண்பாட்டை புதுப்பிக்கும் திட்டம்’ மற்றும் ‘ஜெலூர் கெமிலாங்’ பிரசார தொடக்க விழாவில் பேசுகையில், இத்தகைய பண்பாட்டு செயல்பாடுகள் நாட்டின் நாட்டுப்பற்றுத் தேசச்சிந்தனையை வளர்க்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் அரசியல் செயலாளர், மற்றும் தேசிய பண்பாட்டு மற்றும் கலைத் துறையின் பண்பாட்டு வழிகாட்டல் பிரிவைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளுள் MADANI விவசாய விற்பனை, ரஹ்மா விற்பனை, உடல் பரிசோதனை, பந்துன் பாடல்கள், விளையாட்டுகள், சமூக விருந்தினர், களநடை கலைப் பயிற்சிகள் மற்றும் நடன போட்டி ஆகியவை இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here