புத்ராஜெயாவில் இன்று காலை 8.30 மணியளவில் நீதி மன்ற்த்திற்கு நஜிப் ரசாக் வந்தபோது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்,. சிலர் முன்னாள் பிரதமரைக் குறிப்பிட்டு “Free Bossku” என்று கோஷமிட்டனர். அவர்கள் காலை 6 மணிக்கே கூடியிருந்தனர். முன்னாள் சட்ட அமைச்சர் ஜைத் இப்ராஹிம், அம்னோ பொதுச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி, இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே, உச்ச மன்ற உறுப்பினர் மஹ்த்சிர் காலித் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முன்னாள் மன்னரின் வீட்டுக் காவல் ஆணையை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீதி மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடர நஜிப்பிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து கூட்டரசு நீதிமன்றம் இன்று தனது முடிவை வெளியிட உள்ளது. மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் தலைமையிலான பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் ஜபரியா யூசோப் மற்றும் ஹனிபா ஃபரிகுல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை வழங்கும்.
SRC International Sdn Bhd நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நஜிப், ஆகஸ்ட் 23, 2022 முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். செப்டம்பர் 2, 2022 அன்று அவர் அரச மன்னிப்புக்கான மனுவைத் தாக்கல் செய்தார். கூட்டாட்சி பிரதேச மன்னிப்பு வாரியம் பின்னர் அவரது சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக பாதியாகக் குறைத்து, அபராதத்தை RM210 மில்லியனில் இருந்து RM50 மில்லியனாகக் குறைத்தது.






















