திரெங்கானு:
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஜாலூர் கெமிலாங்கில் (மலேசிய தேசியக் கொடி) படக்கலையில் இருந்த பிழைக்காக திரெங்கானு அம்னோ இளைஞர் பிரிவு மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரிவு தலைவர் தெங்கு ஹபிஸ் தெங்கு புத்தேரா கூறுகையில், இந்த்ப்பிழை ஒரு சுய தொழில்முறை கிராபிக் வடிவமைப்பாளரால் செய்யப்பட்டதாகுமென்று அவர் கூறினார்.
தேசியக் கொடியின் மரியாதையை பாதிக்கும் தவறுகள் சகிக்கப்படமாட்டாது என்றும், விசாரணையை அதிகாரிகளிடம் விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கெப்பாலா பத்தாஸ் பகுதியில் ஜாலூர் கெமிலாங் கொடியை தலைகீழாக ஏற்றிய வழக்கில் 59 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
தேசியக் கொடியுடன் தொடர்புடைய மொத்தம் 16 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.




















