e-Placement முதல் கட்டத்தின் கீழ் சபாவில் 307 மருத்துவ அதிகாரிகள் நியமனம்

கோலாலம்பூர்:

சபாவின் சுகாதார வசதிகளை பலப்படுத்தி, பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் 307 நிரந்தர மருத்துவ அதிகாரிகள் e-Placement முதல் கட்டத்தின் கீழ் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அமாட் அறிவித்துள்ளார்.

இதில் 10 அதிகாரிகள் சண்டாக்கான், கினாபடாங்கான், பெலுரான், தெலுபிட், தொங்கோட் ஆகிய பகுதிகளுக்கான முக்கிய பரிந்துரை மருத்துவமனையான டச்சஸ் ஆஃப் கென்ட் மருத்துவமனையில் (HDOK) பணியாற்றுவார்கள் என்றும், 414 படுக்கைகள் மற்றும் 19 சிறப்பு பிரிவுகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு புதிய நியமனங்கள் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை, அவசரசிகிச்சை மற்றும் பிரசவ சேவைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here