ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் – பிரதமர் அன்வார் உடனடி, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவு

கோலாலம்பூர்:

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகனுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

“இது ஒரு தீங்கிழைக்கும் மற்றும் துரோகமான செயல். சம்பவம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அன்வார் மேலும், “பள்ளிகளில் நடைபெறும் பகடிவதை (bullying) பிரச்சினையிலிருந்து நாம் இன்னும் மீளாத நிலையில், இதுபோன்ற வருந்தத்தக்க இன்னொரு சம்பவம் ஏற்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரபிசி மற்றும் அவரது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here