தீபாவளி கொண்டாடலாம் .. அதுக்காக இப்புடியாமா. குவியும் விமர்சனங்கள்

சென்னை:

விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி சீரியலில் ‘ஜெனி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பெரிய வர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் பார்வையை ஈர்த்து வருகிறார்.

திவ்யா, விஜய் டிவியில் கலக்குவதற்கு முன்பு முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப் பான கேளடி கண்மணி சீரியலில் தான் . சன் டிவியில் அறிமுகமான திவ்யாவிற்கு சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்வில்லை.

பின்னர் சன் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘லட்சுமி வந்தாச்சி’ மற்றும் ‘சுமங்கலி’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து சீரியலில் வலம் வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.

சீரியல் நடிகையாக வலம் வந்த திவ்யாவிற்கு விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்த திவ்ய திடீரென செல் லம்மா சீரியலை விட்டு விலகினார்.

செல்லம்மா சீரியலை விட்டு விலகியதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியல் தான். பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்த ஜெனி என்ற கதாபாத்திரத்தை பிறப்பாக ஏற்று நடித்தார். ஜீ தமிழ், சன் டிவி என பல சீரியல்களில் வலம் வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் சொல்லும் அளவிற்கு இல்லை.

ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு கை கொடுத்தது. இந்த சீரியலுக்கு பின் திவ்யாவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. ரசிகர்கள் திவ்யாவை ஆஹா ஓஹோ என கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார் திவ்யா.

தற்போது சீரியல் விறு விறுப்பாக சீரியல் சென்று கொண்டுள்ளது. திவ்யா அணிந் திருக்கும் ஜீன்ஸில் பட்டாசுகளை வைத்து வித்யாசமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன பேண்ட் இது என கமெண்டுகளை குவிந்து வருகின்றனர். தீபாவளி கொண்டாடலாம் .. அதுக்காக இப்படியாமா. உனக்கே ஓவரா இல்ல எனக்கின்றன பல்லாயிரக்கணக்கான விமர்சனங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here