சாரா கைரினா மரணம் : விசாரணை நாளை தொடங்குகிறது

கோத்த கினபாலு,

13 வயது மாணவி சாரா கைரினா மஹாதீர் மரணம் தொடர்பான விசாரணை குறித்து நாளை காலை 9 மணிக்கு கோத்த கினபாலு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நொரைதா லமாட் (45) சார்பில் வழக்கறிஞர் ஹமிட் இஸ்மாயில் இன்று இதை உறுதிப்படுத்தினார். விசாரணை குறித்த குறிப்பான Mention நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, என்று அவர் தெரிவித்தார்.

போலீசார் அளித்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர், சாரா கைரினாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய சட்டத்தரணி மன்றம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டிருந்தது.

சாரா கைரினா, ஜூலை 17 அன்று கோத்த கினபாலுவிலுள்ள குயின் எலிசபெத் I மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு, அவர் மயக்கநிலையிலிருந்து மீட்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here