கோலாலம்பூர்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இடம்பெற்றுள்ள பேரழிவான வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மலேசியா அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள், சொட்டுக்கள், உறவுகளை இழந்து துயரத்தில் மூழ்கிய குடும்பங்கள், ஆபத்தான சூழ்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் இவை அனைத்தும் மனதை உலுக்கும் வகையில் உள்ளன என்றார் அவர்.
இந்த கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் மலேசிய மக்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள். உங்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். முன்னணியில் போராடும் பலரின் வீரத்திலும், கருணையிலும், மனோதிடத்திலும் இருந்து நாங்கள் வலிமை பெறுகிறோம்,” என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
அதே சமயம், துயரில் வாடும் அனைவருடனும், இன்னும் நம்பிக்கையை தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்களுடனும் மலேசியாவின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.



















