கோலாலம்பூர்:
இன்று மாலை 7 மணி வரை பெட்டாலிங், உலு லங்காட், கோம்பாக் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என, மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.
அதேபோன்று, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா மற்றும் லாபுவான் மாநிலங்களிலும் இதே போன்ற வானிலை நிலவும் எனவும் அது எதிர்பார்க்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இடியுடன் கூடிய மழை காணப்படும் அறிகுறிகள் இருந்தால், MetMalaysia இந்த எச்சரிக்கையையோ விடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான எச்சரிக்கைகள் அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் குறுகியகால எச்சரிக்கைகளாகும்.
பொதுமக்கள் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற MetMalaysia இணையதளம் www.met.gov.my
, சமூக ஊடகங்கள் அல்லது myCuaca செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















