கோலாலம்பூர்:
சபா பெர்னாம் (Sabak Bernam) பகுதியில், பள்ளி விடுதியில் தங்கியிருந்த, படிவம் மூன்றைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்ததால், ஆபத்தான நிலையில் உள்ளார்.
இது, பள்ளிப் பகடிவதை செயலால் (bullying) நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, மாணவரின் தாயார், காவல்துறை புகார் அளித்துள்ளார்.
மாணவரின் தாயாரின் கூற்றுப்படி, அவரது மகன் அகமட் இர்ஃபான் அகமட் ஹனாஃபி (Ahmad Irfan Ahmad Hanafi), மூளையில் ரத்தக் கசிவு, தாடை எலும்பு முறிவு நுரையீரல் காயங்களால் அவதிப்படுகிறார்.
காவல்துறைக்குக் கிடைத்த மருத்துவ அறிக்கை, மாணவர் வெறுமனே விழுந்ததற்கான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்துத் தாமதமாகத் தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகத்தின் மீது, மாணவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில், மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த அகமட் இர்ஃபான், தற்போது மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





















