பள்ளி பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய ஆய்வு!

கோலாலம்பூர்:

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்யுமாறு, கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வாளர்கள், வாராந்திர அறிக்கைகளை, கல்வித் துறைத் தலைமை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சபா பெர்னாமில் (Sabak Bernam) உள்ள பள்ளி விடுதியிலிருந்து மாணவர் ஒருவர் கீழே விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கைகள், கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வித் துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அகமட் (Dr. Mohd Azam Ahmad) தெரிவித்தார்.

எனவே தான், பள்ளிப் பாதுகாப்பு சீர்திருத்தக் குழு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், நிபுணர்கள், அரசு சாரா அமைப்புகள், காவல்துறை, சமூகப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, பள்ளிப் பகடிவதை செயல்கள் (bullying), பாலியல் வன்முறை, விடுதிப் பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை மறு ஆய்வு செய்து வருகிறது.

அதுமட்டும் இன்றி, அதிகாரிகள், பள்ளிக்கு முன்னறிவிப்பின்றிச் சென்று, கண்காணிப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அவர் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here