கோலாலம்பூர்:
Tabung Haji Plantation Berhad நிறுவனத்தின் தலைமைச் நிர்வாக இயக்குனர் (CEO) முகமட் சைனுரின் முகமட் சைன் அவர்களின் ஒப்பந்தம் நேற்று நிறுத்தப்பட்டது.
இது குறித்து, அந்நிறுவனம் மலேசியப் பங்குச் சந்தையில் (Bursa Malaysia) தாக்கல் செய்த அறிக்கையில், ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதற்கான கடிதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
மற்றொரு தனி அறிக்கையில், சைனுரின், ஒழுக்கக்கேடு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இவர், அக்டோபர் 1, 2021 முதல் தலைமைச் நிர்வாக இயக்குனர் பதவியை வகித்து வந்தார்.





















