“துணிவு என்பது வெளியில் கிடைப்பதல்ல,
அது நம் உள்ளத்தில் உறைந்திருக்கும் ஒளி.”
இந்த வாழ்க்கைப் பயணத்தில் சவால்களும் கஷ்டங்களும் ஏற்படும் போது, மக்கள் அவற்றை சமாளிக்க முடியாமல் பதற்றத்தையும் பயத்தையும் அனுபவிக்கிறார்கள். கடினமான காலங்களில் தெளிவும் புரிந்துணர்வும் இல்லாததால், மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது போல் தோன்றினாலும், ஒருவகையில் பார்த்தால் அவர்களின் இயல்பான தன்மை மாறவில்லை. அனைவருமே சுகமாகவும் சுதந்திரமாகவும் இருக்கவே விரும்புகிறார்கள். அதுதான் எப்போதும் அவர்களின் உள்ளார்ந்த ஆவலாக இருந்து வருகிறது. ஆனால், பிரச்சனைகளின் தாக்கத்தால் அவர்கள் அச்சமடைகிறார்கள். தங்களிடம் இருக்கும் உள்வலிமையை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
உங்களுள் ஓர் அற்புதமான சக்தி இருக்கிறது. அதுதான் “துணிவு” என்று அழைக்கப்படுகிறது. இந்த காரிருள் சூழ்ந்த கடினமான கவலையான காலங்களைக் கடந்து செல்ல நாம் துணிச்சலோடு செயல்பட வேண்டும். அச்சத்தோடு அல்ல. இருள் நிறைந்த அடர்ந்த காட்டை நம்முள் உள்ள ஒளியால் நிரப்பவேண்டும். நம் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சியத்துடனும், தெளிவான கண்ணோட்டத்துடனும் வாழ வேண்டும் – சந்தேகத்துடன் அல்ல. இதைத்தான் நான் எப்போதும் சுட்டிக்காட்டி வருகிறேன்.
“நாம் தேடும் ஒளி வெளியில் இல்லை
உள்ளத்தின் அமைதியில் புதைந்திருக்கும் தீபம் அது.”
இருள் சூழ்ந்த தருணங்களில் நம்முள் குடிகொண்டிருக்கும் நல்லவை அனைத்தையும் நாம் மலரவிட வேண்டும். நாம் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து, செயல்பட வேண்டும். பல சமயங்களில் சற்று நின்று நிதானமாக நம்மிடமே நாம் கேட்க வேண்டும்: இந்த உலகில் ஒரு பாகமாக இருக்கும் நாம் எதை சார்ந்திருக்க போகிறோம்? நீங்கள் உங்களையே சார்ந்திருக்க வேண்டும். உங்கள் உள்ளத்தில் இருக்கும் வலிமையைச் சார்ந்திருக்க வேண்டும். உள்ளத்தில் இருக்கும் தெளிவைச் சார்ந்திருங்கள். ஏனெனில், நாம் எளிதில் பாதிப்படையக் கூடியவர்கள். ஆயினும், நம்முள் அளவிட முடியாத வலிமையும் விவேகமும் இருக்கின்றன. எந்த சூழ்நிலையிலும் நாம் வலிமையோடு செயல்பட வேண்டும் என்பதே உண்மை.
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:





















