கோலாலம்பூர்:
சிரம்பான் சிறார் நீதிமன்றத்தில் (Seremban Juvenile Court), 16 வயது நான்காம் படிவ மாணவர் ஒருவர், இரண்டாம் படிவ வகுப்புத் தோழியைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்தச் சம்பவம், கடந்த மே மாதம் 2-ஆம் தேதி, பள்ளி வகுப்பறை ஒன்றில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சிறார்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், நீதிமன்ற நடவடிக்கைகள் இரகசியமாக, மூடிய அறையில் நடத்தப்பட்டன.
நீதிபதி Saiful Sayoti, குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM4,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்தார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட மாணவர், பாதிக்கப்பட்டவரிடமிருந்தும், சாட்சிகளிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று, நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும்





















