கோலாலம்பூர்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) ஆகியோர், தங்கள் நாடுகள், வளர்ச்சிப் பங்காளி நாடுகள் என்றும், போட்டியாளர்கள் அல்ல என்றும் உறுதியளித்துள்ளனர்.
மேலும், வர்த்தகத்தை மேம்படுத்துவது, எல்லையில் பதற்றத்தைக் குறைப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர். கடந்த ஏழு ஆண்டுகளில், முதன்முறையாகச் சீனாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, இந்தியாவின் $99.2 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியைப் பராமரிக்கவும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், எல்லையின் பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வரையறுக்கக் கூடாது என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். வர்த்தகத் தடைகளை நீக்குவது, நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் பலதரப்பு தளங்களில் ஒத்துழைப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும், இரு தலைவர்களும் விவாதித்தனர்.
எனவேதான், அமெரிக்காவின், இந்தியா மீதான வரி அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உறவுகளை உறுதிப்படுத்துவதில், கவனமான முன்னேற்றத்தைக் குறிப்பதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்



















