குறைந்து வரும் பிறப்பு விகிதம்: எலான் மஸ்கின் கருத்தால் மீண்டும் சர்ச்சை!

கோலாலம்பூர்:

டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), இனப் பிறப்பு விகிதம் குறித்த தனது கருத்தால், மீண்டும் உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், டென்மார்க்கில் உள்ள ஒரு பாகிஸ்தானியக் குடியேறி எனக் கூறப்படும் ஒருவர், டென்மார்க் நாட்டினரின் பிறப்பு விகிதம், குடியேற்றவாசிகளின் பிறப்பு விகிதத்தை விடக் குறைவாக உள்ளதால், டென்மார்க்கியர்கள், ‘அழிக்கப்படுவார்கள்’ என்று எச்சரிக்கிறார்.

அந்தக் காணொளியில், பாகிஸ்தானியர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கும்போது, டென்மார்க்கியர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கின்றனர் என்றும், இதனால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை, உள்ளூர் மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்றும் அந்த பாகிஸ்தானிய நபர் கூறுகிறார்.

மேலும், இதேபோன்ற மக்கள் தொகைப் போக்குகளை எதிர்கொள்ளும், மற்ற நோர்டிக் (Nordic) நாடுகளையும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த காணொளிக்குக் கருத்து தெரிவித்த எலான் மஸ்க், “அவரது கணிதம் சரியானது” (His math is correct) என்று கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் இந்தக் கருத்து, உலகெங்கிலும் மக்கள் தொகைக் குறைவு மற்றும் குடியேற்றம் தொடர்பான விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here