ஜாலான் ராசா துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது சந்தேக நபர் கைது

சிரம்பான்:

நேற்று காலையில் சிரம்பான், போர்ட்டிக்சன் டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் மூன்றாவது சந்தேக நபர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே நேற்று இரண்டு சந்தேக நபர்களை 12 மணி நேரத்திற்குள் கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கியை போலீசால் பறிமுதல் செய்தனர் என்று, நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் டத்தோ அல்சாஃப்னி அமாட் தெரிவித்தார்.

30 முதல் 40 வயது வரையிலான மூன்று சந்தேக நபர்களையும் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) வரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“மூவரும் நீலாய், போர்ட்டிக்சன் மற்றும் சிரம்பான் ஆகிய இடங்களில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர்.

“கொலை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் துப்பாக்கி (அதிகரிக்கப்பட்ட அபராதங்கள்) சட்டம் 1971 இன் பிரிவு 3 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று (டிசம்பர் 11) கூறினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், 47 வயதுடைய நபரும் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10) காலை போர்ட்டிக்சன் சுங்கச்சாவடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மாம்பாவ் அருகே உள்ள ஜாலான் ராசாவில் வழிமறிக்கப்பட்டு, ஒரு கும்பலால் சுடப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்தில் உயிருடன் காணப்பட்டனர் ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

தாக்குதலின் நோக்கம் பழிவாங்கல் மற்றும் குண்டர் கும்பலுக்கு இடையிலான ட்டி என்று போலீசார் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here