ஈப்போ: லாரி டிரைவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது!

கோலாலம்பூர்:

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, ஜாலான் ஹோர்லி (Jalan Horley) அருகே, ஃபெண்டி (Fendi) என்ற ஆடவரைக் கொலை செய்ததாக, 32 வயது லாரி டிரைவரான, எம்.ஐ. சரவணன் மீது(M.I. Saravanan), ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்கு, மரண தண்டனை அல்லது, 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர், ஒரு வெள்ளை லாரியால் துரத்தப்பட்டதும், பின்னர், அவர், மோதி கொல்லப்பட்டதும், சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதே நாளில், கோலாலம்பூரில், சரவணன் கைது செய்யப்பட்டார்.

சரவணன், தனது ஆறு வயதுக குழந்தைக்காக, ஒரே வருமானம் ஈட்டுபவர் என்பதால், அவரது வழக்கறிஞர், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, தடயவியல், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு, நவம்பர் 4-ஆம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here