வெள்ளத்தில் காணாமல் போன 28 வயது இளைஞர் பரதனின் உடல் சடலமாக மீட்பு

குவாந்தானில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 20) காராக் அருகே உள்ள கம்பங் தஞ்சூங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போன ஒருவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) மரக் குப்பைகள் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  (ஜேபிபிஎம்) உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) இஸ்மாயில் அப்துல் கனி தெரிவித்தார்.

28 வயதான கே.பரதன் என்பவரின் சடலம் காலை 10.40 மணியளவில் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காரக் தீயணைப்பு நிலையத்திற்கு திங்களன்று ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. வெள்ளத்தின் போது பொருட்களை நகர்த்தும்போது ஒருவர் காணாமல் போனார். மேலும் அவர் தனது மகனைத் தொடர்பு கொள்ளத் தவறியதால் பாதிக்கப்பட்டவரின் தந்தையால் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

“அதைத் தொடர்ந்து, கம்போங் தஞ்சோங் காரக் மற்றும் அருகிலுள்ள ஆற்றைச் சுற்றிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் இன்று உடலைக் கண்டுபிடித்த பின்  உடல் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here