செரம்பான்: சக நண்பரைக் கத்தியால் குத்திய ஆடவர் கைது!

கோலாலம்பூர்:

செரம்பான், தாமான் ராசா ஜெயா (Taman Rasah Jaya) பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில், 23 வயது இளைஞர், தனது 31 வயது சக நண்பரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில், அந்த ஆடவருக்கு, கழுத்தில், பலத்த காயம் ஏற்பட்டது.

செரம்பான் காவல்துறைத் தலைவர், ஏசிபி முகமட் ஹத்தா சே டின் (ACP Mohammad Hatta Che Din) கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து, மாலை 6.24 மணியளவில், உள்ளூர் ஆடவர் ஒருவர், புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த ஆடவர், சிகிச்சைக்காக, துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு (Tuanku Ja’afar Hospital) கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே காயமடைந்திருந்த சந்தேக நபரும் சுங்கை பூலோ மருத்துவமனையில் (Sungai Buloh Hospital) சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, தப்பித்துச் செல்ல முயற்சி செய்கையில், கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, சந்தேக நபர் விசாரணைக்காக ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனவே தான் காவல்துறை இந்த சம்பவத்தை கொலை முயற்சி என வகைப்படுத்தி, குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ், விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here