கோலாலம்பூர்:
வரவிருக்கும் பாஸ் கட்சியின் 71ஆவது பேராளர் மாநாட்டில் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டிய அவசியமில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இம்மாநாட்டில் 11ஆவது பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்காமல், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமை, அமெரிக்காவின் அரசியல் புவியியல், நாட்டின் மீதான கட்டணங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
“என்னுடைய கருத்துப்படி, இந்தத் தீர்மானம் இப்போது தேவையில்லை. யார் பிரதமராக இருப்பார்கள் என்பது பற்றிப் பேச இது சரியான நேரமல்ல. அதற்கு பதிலாக தேசியக் கூட்டணியை வலுப்படுத்தி, சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதிலும் மக்களின் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவது சிறந்தது,” என்று துவான் இப்ராஹிம் கூறினார்.





















