அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பிரதமர் அன்வார் வலியுறுத்தல்!

கோலாலம்பூர்:

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் (Doha), நடந்த, சிறப்பு அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில், இஸ்ரேலின், சமீபத்திய வான்வழித் தாக்குதல்களையும், காசாவில் (Gaza) நடந்து வரும், இனப்படுகொலையையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) கடுமையாகக் கண்டித்தார். மாநாட்டில் உரையாற்றிய அன்வார், இஸ்ரேலுக்கு எதிராக, கடுமையான, தண்டனை நடவடிக்கைகளை, எடுக்க வேண்டும் என்றும், காஸாவுக்குச் செல்லும், Global Sumud Flotilla கொண்டு செல்லப்படும், மனிதாபிமான உதவிக்கு, பாதுகாப்பானப் பாதை, வழங்கப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தினார்.

கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாதட் அல்-தானியின் அழைப்பின் பேரில், நடைபெற்ற இந்த உச்சி மாநாடு, ஹமாஸ் மூத்தத் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் (Khalil al-Hayya) மகன் உட்பட, ஆறு பேர், இஸ்ரேலியத் தாக்குதலில், கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ஆம் தேதி, கூட்டப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் (Datuk Seri Mohamad Hasan), துணை சமய விவகார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் (Dr Zulkifli Hasan) மற்றும் மூத்த அதிகாரிகளுடன், அன்வார், நேற்று இரவு, கத்தார் நேரப்படி, 8.10 மணியளவில், அகமாட் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். பின்னர், இன்று காலை, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்து, பட்டர்வொர்த்தில் நடைபெறும், மலேசிய தின 2025 கொண்டாட்டத்தில், கலந்துகொள்ள உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில், துர்க்கியின் ரெசெப் தயிப் எர்டோகான் (Recep Tayyip Erdogan), பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas), ஜோர்டான் மன்னர் அப்துல்லா (King Abdullah II) உள்ளிட்ட, பல உலகத் தலைவர்களும், கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here