கோத்த கினபாலு,
மறைந்த ஸாரா கைரினா மகாதீரின் தாயார் தனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதியளிக்கும் ஒப்புதலை தர மறுத்து விட்டார், ஆனால் இந்த நடைமுறையின் முக்கியத்துவம் குறித்து தாம் பலமுறை விளக்கங்கள் கொடுத்தும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, இன்று மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குயின் எலிசபெத் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையில் வளாகத்திற்கு வெளியே பயிற்சி பெறும் மருத்துவ அதிகாரி டாக்டர் லோகராஜ் , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தாயார் நோரைடா விடம் மருத்துவ-சட்ட பிரேத பரிசோதனையின் அவசியத்தை பல முறை விளக்கியதாக சாட்சியமளித்தார்.
தாய் நோரைடா “மறுப்பு அறிவிப்பு கடிதம் – ஒருவர் சொந்த விருப்பப்படி பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு” என்ற அதிகாரப்பூர்வ படிவத்தில் கையொப்பமிட்டார். இந்த விளக்கங்கள் கையொப்பமிடுவதற்கு முன்பும், பின்னரும் வழங்கப்பட்டதாகவும், படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களும் தாயாரால் நிரப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார் டாக்டர் லோகராஜ்.
விசாரணை நடத்தும் அதிகாரியாக செயல்படும் துணை அரசு வழக்கறிஞர் முகமது ஃபைரூஸ் ஜொஹாரி விசாரணையின் போது கேட்ட கேள்விக்கு டாக்டர் லோகராஜ் பதிலளித்தார்: “நான் அவருக்கு படிவத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு இரண்டு முறை விளக்கினேன். கையெழுத்திடும் போது மற்றும் பிறகு கூட பல முறை விளக்கங்களைத் தொடர்ந்தேன்.” என்றார் அவர்.




















