பெர்சத்து அதிகாரத்தில் இருக்கும் பெரிகாத்தான் அரசாங்கம் பெர்சத்து அல்லது பாஸ் தலைவர்களைக் காட்டிலும் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் போன்ற அம்னோ தலைவர்களை பணிநீக்கம் செய்வது எளிதாக இருக்கிறது என்கிறார் பினாங்கு மாநில துணை முதல்வரும் பேராசிரியருமான ராமசாமி தெரிவித்தார்.
தாஜுதீன் தனது முன்னாள் பதவியில் தக்கவைக்க தகுதியானவர் அல்ல. அவர் தனது திறமையின்மை மற்றும் பொறுப்பற்ற தன்மைக்கு பெரும் விலை கொடுத்தார். பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதில் ரயில் விபத்தை விளக்குவதில் அவர் காட்டிய இடைநிறுத்தம் ஒரு பேரழிவு.
துரதிர்ஷ்டவசமாக, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியை ஆதரிப்பதற்காக அம்னோ செலுத்த வேண்டிய விலை இதுதான்.