மலேசியாவில் “iPhone 17 அதிகாரப்பூர்வ வெளியீடு – தி எக்ஸ்சேஞ்ச் TRX-இல் பெரும் வரிசை

கோலாலம்பூர்:

ப்பிளின் புதிய iPhone 17 தொடர், மலேசியாவின் முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள The Exchange TRX-இல் இன்று பெரும் வரவேற்புடன் அறிமுகமாகியது.

காலை 8.00 மணிக்கே கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காலை 7.30 மணிக்கே வரிசையில் நின்றனர். புதிய iPhone 17, iPhone Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை மலேசியா உட்பட உலக சந்தைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

இதில் iPhone 17 -ஐ முற்கூட்டியே பதிவு செய்து பிக்-அப் வரிசையில் முதலில் இருந்த டேனியல் , அவர் நள்ளிரவு 12 மணி முதலே காத்திருந்து, Cosmic Orange நிறத்தில் iPhone 17 Pro Max-ஐ பெற்றார்.

The crowd in front of Apple The Exchange TRX at 7:30am

அதேநேரம் நேரடியாக கடைக்கு வந்து வாங்கும் (walk -in) வரிசையில் முதன்மை இடத்தை பிடித்தவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த மு. துஷார் அகமட் ஹசன். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே மலேசியா வந்து, அதிகாலை 4 மணி முதலே காத்திருந்து அதே மாடலை பெற்றார்.

First in line for iPhone 17 Pro Max: Md. Tushar (left), Danial (right).

இன்றைய அறிமுக நாளில் பிக்-அப் மற்றும் வாக்-இன் செயல்முறைகள் எளிதாகவும் சீராகவும் நடைபெற்றன. வாடிக்கையாளர்களுக்கு உதவ பல ஆப்பிள் ஊழியர்கள் தயாராக இருந்தனர். புதிய சாதனத்தை வாங்க விரும்புவோருக்காக Apple Specialist-களுடன் தனிப்பட்ட அமர்வுகளும் வழங்கப்பட்டது.

மலேசியாவில் iPhone 17-ன் விலை விவரம்

iPhone 17

256GB – RM3,999

512GB – RM4,999

iPhone Air

256GB – RM4,999

512GB – RM5,999

1TB – RM6,999

iPhone 17 Pro

256GB – RM5,499

512GB – RM6,499

1TB – RM7,499

iPhone 17 Pro Max

256GB – RM5,999

512GB – RM6,999

1TB – RM7,999

2TB – RM9,999

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here