கூலாய்: 10 வயதுச் சிறுமியைச் சீண்டியது: சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர்:

கூலாய், ஜாலான் ஜம்பு ஆயிர், தாமான் இரிஸ் (Jalan Jambu Air, Taman Iris, Kulai) பகுதியில், உள்ள, ஒரு பொதுக் கழிப்பறையில், 10 வயதுச் சிறுமியை, சீண்டியதாகச், சந்தேகிக்கப்படும், 32 வயது ஆடவர், ஒருவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு, 7.30 மணியளவில், நடந்த இந்த சம்பவம் குறித்து, செப்டம்பர் 14-ஆம் தேதி, புகார், பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை, 5.45 மணியளவில், அந்த ஆடவர், கைது செய்யப்பட்டார் என்று, கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி டான் செங் லீ (ACP Tan Seng Lee), கூறினார்.

இதனிடையே கைது செய்யப்பட்டவருக்கு , மூன்று பாலியல் குற்றப் பதிவுகள், உள்ளன என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேல்விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர், 2017-ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றச் சட்டம் பிரிவு 14(a)-இன் கீழ், விசாரிக்கப்படுகிறார். எனவேதான், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

மேலும், இந்த ஆடவர், மற்ற வழக்குகளுடன், தொடர்புடையவரா என்பதை, கண்டறிய, அதிகாரிகள், தொடர்ந்து, விசாரணை, நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here