கோலாலம்பூர்:
கெனிங்காவு, அபின்-அபின் (Apin-Apin, Keningau) பகுதியில், வெள்ளத்தில், இழுத்துச் செல்லப்பட்ட, 35 வயது, சபா மின்சார ஊழியர், மாஸ்டே ரஸ்மின் (Masdeh Rasmin) என்பவரின் உடல், நேற்று மாலை, கண்டெடுக்கப்பட்டது.
அவர் காணாமல் போன இடத்திலிருந்து, சுமார், 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, சுங்கை கம்போங் லியாவ் லாவுட் (Sungai Kampung Liau Laut) பகுதியில், மாலை, 6.18 மணியளவில், மாஸ்டே, கண்டெடுக்கப்பட்டதாக, சபா தீயணைப்பு, மீட்புத் இலாகாவின் இயக்குநர், முகமட் பிசார் அசிஸ் (Mohd Pisar Aziz) கூறினார்.
இதனிடையே பாதிக்கப்பட்டவர், மேலும், இரு சகாக்களுடன், கம்போங் நுன்டுனான் (Kampung Nuntunan) பகுதியில், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்து மறு இணைப்பு கொடுப்பதற்காக பாலத்தைக் கடந்தபோது, வெள்ளத்தில்,
சிக்கிக்கொண்டனர்.
இருப்பினும் அவரது, சகாக்கள், உயிர் தப்பிய நிலையில், மாஸ்டே, வெள்ள நீரில், அடித்து செல்லப்பட்டார்.
`டீம் காலோன் ஸ்டார்’ (Team Gallon Star) என, அறியப்படும், உள்ளூர் தன்னார்வலர்கள், இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு, அவரது உடலை, மீட்டனர். இந்தத் தேடுதலில், ஆளில்லா விமானங்கள் (drones), நிலக் குழுக்களும், பெருமளவு உதவின.




















