கோலாலம்பூரில் மூன்று நாள் சோதனை: 10,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து குற்ற நோட்டீஸ்கள்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில் போக்குவரத்துகளில் தடைகளை ஏற்படுத்துதல், சிக்னல் மீறல் மற்றும் மஞ்சள் பெட்டியில் வாகனம் நிறுத்துதல் போன்ற சிறிய குற்றச்செயல்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.

செப்டம்பர் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற Operation Compliance with the Law எனப்படும் சிறப்பு நடவடிக்கையின் போது, மொத்தம் 10,036 குற்றச்செய்தி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் யூசுப் ஜான் முகமட் தெரிவித்தார்.

அந்த முக்கிய குற்றச்செயல்கள்.

போக்குவரத்து சிக்னல் மீறல் – 2,326 நோட்டீஸ்
மஞ்சள் பெட்டியில் வாகனம் நிறுத்துதல் – 525
வெள்ளை கோட்டை கடந்த வாகன நிறுத்தம் – 470
விதிமுறைப்படி இல்லாத வாகன எண் பலகைகள் – 224
அழுக்கு/மங்கலான/அலங்கார எண் பலகைகள் – 458
சீட் பெல்ட் அணியாதது – 408
ஹெல்மெட் அணியாத மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் – 32
அனுமதியின்றி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மாற்றங்கள் – 199

இதில், 9,508 நோட்டீஸ் வாகனங்களுக்கு வழங்கப்பட்டன; 528 நோட்டீஸ் பாதசாரிகளுக்கும் வழங்கப்பட்டன.

வாகன வகைப்படி:
மோட்டார் சைக்கிள்கள் – 4,578
கார்கள் – 4,353
டாக்ஸிகள் – 219
வேன்கள் – 207
லாரிகள் – 146

போலீசார் இந்த நடவடிக்கையில் உடனடியாக சம்மன் வழங்காமல், முதலில் மக்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முக்கியமாகக் கொண்டதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here