டீசல் மானிய முறைகேடு: `எம்.ஏ.சி.சி’ நடவடிக்கை!

கோலாலம்பூர்:

RM247 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான, டீசல் மானியத்தைத் (diesel subsidies) முறைகேடாக பயன்படுத்திய ஒரு, பெரும், எரிபொருள் திருட்டு கும்பலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC அம்பலப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, விசாரணைகள், தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்தத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று MACC தலைமை ஆணையர், டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று, நடைபெற்ற, ஒரு செய்தியாளர், சந்திப்பில், கூறினார்.

இதனிடையே, இந்த மோசடி கும்பல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இயங்கி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, ஒப்ஸ் கேரென்’ (Ops Karen) என்ற, ஒரு கூட்டு நடவடிக்கையின், மூலம், இந்த முறைகேடு, அம்பலமானது. இதில், கிடைத்த, தகவல்கள், நிதி பகுப்பாய்வு மூலம், இந்த முறைகேடு, கண்டறியப்பட்டது.

இந்த மோசடியில், டத்தோ’ (*Dato’*) பட்டம் கொண்ட, நிறுவன இயக்குநர்கள், உயர்நிலை நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது.

எனவேதான் இந்த முறைகேடு குற்றச் செயலில் தொடர்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கும், நிதியை மீட்டெடுத்து அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கும் எம்.ஏ.சி.சி.’, திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here